டிவி விவாதங்களில் ரஜினி ரசிகர்கள் கலந்து கொள்ள வேண்டாம்: ரஜினியின் முக்கிய அறிவிப்பு

டிவி விவாதங்களில் ரஜினி ரசிகர்கள் கலந்து கொள்ள வேண்டாம்: ரஜினியின் முக்கிய அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர் மற்றும் ஆதரவாளர் என்ற பெயரில் தினமும் டிவி விவாதங்களில் ஒருசிலர் பேசி வரும் நிலையில் இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ‘ஒருசில தனியார் தொலைக்காட்சிகளில் ரஜினியின் அரசியல் குறித்து ஒருசிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அகில இந்திய ரஜினி ரசிகர்கள் மன்றத்தில் இருந்தோ அல்லது ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்தோ யாரும் அதிகரபூர்வமாக தொலைக்காட்சியில் விவாதம் செய்ய நியமனம் செய்யப்படவில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்பவர்களின் கருத்துக்கள் அவர்களது சொந்தக்கருத்துக்கள். இது எந்த வகையிலும் எங்களை சார்ந்தது இல்லை.

எனவே கடந்த 31ஆம் தேதி ரஜினிகாந்த் அரசியல் குறித்த அறிவிப்புக்கு பின் வெகுவிரைவில் கட்சியின் நிர்வாகிகள் அதிகாரபூர்வ கட்சி அறிவிப்புக்கு பின்னர் அறிவிக்கப்படவுள்ளனர் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply