ரெயில்வே நிலங்களை விற்க இம்ரான்கான் திடீர் முடிவு: எதிர்க்கட்சிகள் கண்டனம்

ரெயில்வே நிலங்களை விற்க இம்ரான்கான் திடீர் முடிவு: எதிர்க்கட்சிகள் கண்டனம்

imranபாகிஸ்தானில் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அதனை சமாளிக்க ரெயில்வே துறைக்கு சொந்தமான நிலங்களை விற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முடிவு செய்துள்ளார். ஆனால் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் பதவியேற்றதில் இருந்தே சிக்கன நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இம்ரான்கான், பாகிஸ்தான் அரசுக்கு சுமார் 3700 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை இருப்பதாகவும், அதனை சமாளிக்க முதல்கட்டமாக பாகிஸ்தான் முழுவதும் தனியாரிடம் சிக்கியுள்ள ரெயில்வே நிலங்களை மீட்டு, அவற்றில் முக்கிய பகுதியில் உள்ள நிலங்களை விற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ரெயில்வே நிலங்களை மீட்கும்போது ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இருப்பினும் ரெயில் பாதைகளின் ஓரங்களில் வாழும் ஏழை, எளிய மக்களின் குடிசைகள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு இம்ரான் கான் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Leave a Reply