இந்தியா முழுவதும் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு

இந்தியா முழுவதும் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு

தமிழகத்தில் உள்ள மைல்கல்லில் ஆங்கிலத்தை அழித்துவிட்டு ஹிந்தியில் எழுதும் நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஹிந்தி மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தாக்கலால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒற்றுமையையும், வலிமையையும் அதிகரிக்கும் விதமாக ஹிந்தியை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் மிக விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இதுகுறித்து பா.ஜ.க. டெல்லி செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஷ்வினி குமார் உபத்யாய் கூறியபோது, ‘மும்மொழி கொள்கையின்படி ஹிந்தி அதிகமுள்ள மாநிலங்களில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் மார்டன் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். அதேபோல், ஹிந்தி அல்லாத மாநிலங்களில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி பாடங்கள் கற்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பை தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளுமா? என்பதை சந்தேகமே.

Leave a Reply