பயர்பாக்ஸில் தேடல் வசதி

instagram1_2460981f

நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்துபவர் என்றால் அதில் தேடல் வசதிக்காக இருக்கும் சர்ச் பார் கட்டத்தை அறிந்திருப்பீர்கள். இணைய முகவரியை டைப் செய்து தேடல் கட்டம் அருகே உள்ள இந்த சர்ச் பாரில் விரும்பிய கீவேர்டை டைப் செய்து தேடலாம். தனியே தேடுபொறி முகவரியை டைப் செய்து தேட வேண்டிய அவசியம் இல்லாமல் நேரடியாகத் தேட உதவும் இந்த வசதி பலரும் அறிந்ததுதான்.

ஆனால் இந்தத் தேடல் கட்டத்தில் எந்தத் தேடுபொறி வர வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும் தெரியுமா? அதிலும் மவுஸ் கிளிக் மூலமே செய்யலாம். பிரவுசரில் இயங்கும் தேடுபொறி மாற்ற வேண்டும் என்றால் கண்ட்ரோல் கீயை அழுத்தி, அம்பு குறி விசையை மேலும் கீழும் அழுத்தினால் தேடுபொறிகள் மாறிக்கொண்டே இருக்கும்.

அதில் வரிசையாக தோன்றும் பட்டியலிலிருந்து கூகுள், அல்லது பிங் அல்லது யாஹூ அல்லது டக் டக் கோவைத் தேர்வு செய்துகொள்ளலாம். இதையே ஆல்ட் விசை மூலம் செய்தால் தேர்வு செய்யும் தேடுபொறியைத் தற்காலிகமாகப் பயன்படுத்தலாம்.

இவ்வளவு ஏன் கண்ட்ரோல் விசையை அழுத்து கே எழுத்தை டைப் செய்தால் நேராக சர்ச் பாரில் டைப் செய்யலாம்.

Leave a Reply