இந்திய குடியரசு தினவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருமை தந்திருந்த ஒபாமா, இந்தியாவின் மத சகிப்புத்தன்மை குறித்து நேற்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். ‘இந்தியாவில் தற்போது மத சகிப்புத்தன்மை இல்லாததை காந்தியடிகள் காண நேர்ந்தால், அவர் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பார் என்று கூறப்பட்ட அவரது கருத்துக்கு இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் அமைப்புகள் வரவேற்றுள்ளன.
இந்திய பயணத்தில் ஒபாமா கூறிய இந்தக் கருத்தை வரவேற்ற மனித உரிமைகளுக்கான ஐக்கிய கிறித்துவ கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜான் தயால் கூறும்போது, “இந்தியாவில் சரிந்து வரும் மதசகிப்புத் தன்மை பற்றிய சங்கடங்கள் அதிகரித்து வருகிறது, இது குறித்த ஒபாமாவின் கருத்து மிக முக்கியமானது, வரவேற்கத்தக்கது.
“இந்தியாவில் வசிக்கும் மற்ற மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினரின் அச்சங்களை தற்போது உலகம் முழுதும் பேசக்கேட்கிறோம். ஒபாமா, தன்னால் இயன்றவரை மிகவும் நேரடியாக இதனை தெரிவித்துள்ளார்.
ஃபாதர் டொமினிக் கூறும்போது, “பல்வேறு மதத்தினரும் சண்டையிட்டுக் கொள்கின்றனர் என்ற நிஜத்தை இந்தியா எதிர்கொள்ள வேண்டும். ஒபாமா கூறியதை யாரும் மறுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. அனைவருக்குமான உண்மையைத்தான் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் இதுதான் எதார்த்தம்.” என்று என்.டி.டிவி. தொலைக்காட்சியில் அவர் தெரிவித்தார்.