முதல்முறையாக சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்த அமெரிக்க அதிபர்

முதல்முறையாக சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்த அமெரிக்க அதிபர்

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் புதிய அதிபராக பதவியேற்று கொண்ட டொனால்ட் டிரம்ப் முதல்முறையாக சவுதி அரேபியாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக சென்றூ அங்கு நடைபெற்ற காலாச்சார நிகழ்வில் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடினார்.

டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மற்றும் மூத்த அதிகாரிகளுடன் நேற்று சவுதி சென்றடைந்தார். இதற்கு முந்தைய அமெரிக்க அதிபர்கள் பதவியேற்றவுடன் முதல்முறையாக கனடாவுக்கு சுற்றுப்பயணம் செய்வது வழக்கம். ஆனால் முதல்முறையாக டிரம்ப் சவுதிக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

மனைவி மெலானியா ட்ரம்ப் உடன் சவுதி அரேபியா வந்திறங்கிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சவுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சவுதி மன்னர் சல்மான் மற்றும் இதர முக்கிய அரச குடும்பத்தினர் அமெரிக்க அதிபரை வரவேற்று சிறப்பு விருந்து அளித்தனர்.

தொடர்ந்து, சவுதி மன்னர் சல்மான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப், சவுதி மற்றும் வளைகுடா நாடுகளின் பாதுகாப்புகான ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

தனது பயணத்தின் ஒரு பகுதியாக சவுதி அரேபிய பாரம்பரிய கலாசார நடன நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது, கையில் வாளுடன் உற்சாகமாக நடனமாடி டிரம்ப் மகிழ்ந்தார்.

 

Leave a Reply