இந்திய ராணுவத்தில் டிப்ளமோ, டிகிரி செவிலியர் படிப்புடன் பணி

nursing

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து இலவசமாக டிப்ளமோ நர்சிங் அல்லது பி.எஸ்சி நர்சிங் படிப்பை முடித்தபின் ராணுவ மருத்துவ பிரிவில் பணிபுரிவதற்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் பெயர்: பி.எஸ்சி (செவிலியர்)

பயிற்சி காலம்: 4 ஆண்டுகள்

பயிற்சி 2016 ஜூலை, ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும்.

பயிற்சி அளிக்கப்படும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. College of Nursing, AFMC Pune

காலியிடங்கள்: 40

2. College Of Nursing, Ch (EC) Kolkata

காலியிடங்கள்: 30

3.College of Nursing, INHS, Asvini

காலியிடங்கள்: 30

4.College of Nursing, AH (R &R), New Delhi

காலியிடங்கள்: 30

5. College of Nursing, CH (CC), Lucknow

காலியிடங்கள்: 40

 

பயிற்சியின் பெயர்: Diploma in General Nursing & Midwifery

பயிற்சி காலம் 31/2 ஆண்டுகள்.

பயிற்சி 2016 செப்டம்பர் மாதம் ஆரம்பமாகும்.

பயிற்சி அளிக்கப்படும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் காலியிடங்கள் விவரம்:

6. School of Nursing, Ch (AF), Bangalore

காலியிடங்கள்: 20

7. School of Nursing, CH (WC), Chandimandir

காலியிடங்கள்: 20

வயதுவரம்பு: 01,08,1991 – 31.07.1999 க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். (இரு தேதிகள் உள்பட).

தகுதி: இரு பயிற்சிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதல் முயற்சியில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட பாடப்பிரிவுகளில் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்  : ரூ.150. இதனை எஸ்பிஐ வங்கியின் செல்லானை பயன்படுத்தி செலுத்த வேண்டும். இதற்கான செல்லான் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2015

மேலும் விவரங்கள் அறிய www.indianarmy.nic.in/www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply