நட்புடன் பழகுகிறோம் என்று சொன்னால் உடலுறவு வைத்து கொள்பவர்கள் என்று அர்த்தம். நடிகை கங்கனா அதிரடி
திரையுலகில் ஒரு நடிகையும், நடிகரும் காதலிப்பதாக வதந்திகள் வந்தால் உடனே சம்பந்தப்பட்ட நடிகரும், நடிகையும் நாங்கள் நட்புடன் தான் பழகுகிறோம். எங்களுக்குள் வேறு ஒன்றும் இல்லை என ஒரு மறுப்பு அறிவிப்பு தெரிவிப்பார்கள். ஆனால் இனிமேல் யாரும் இந்த வார்த்தைகளை பயன்படுத்துவார்களா? என்பது சந்தேகமே. ஏனெனில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை கங்கனா ரனாவத் கூறியபோது, “சினிமாவைப் பொறுத்தவரை, நல்ல நண்பர்கள் என்று கூறினால், அதற்கு செக்ஸ் வைத்துக் கொள்ளும் நண்பர்கள் என்று அர்த்தம்” என்று கூறி அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
மேலும் தான் சினிமாவில் அறிமுகமானபோது இரண்டாம் தர படத்தில் நடிக்க தொடங்கியதாகவும், ஆனால் தன்னுடைய அயராத உழைப்பால் இன்று தேசிய விருது வாங்கிய நடிகையாக மட்டுமின்றி நம்பர் ஒன் நடிகையாக மாறியுள்ளதாகவும், ஆனால் இன்னும் பல நடிகைகள் பல வருடங்களாக சினிமாத் துறையில் வளராமலேயே உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
இந்த சர்ச்சைக்குரிய பதில்களால் கங்கனா மீது பாலிவுட் படவுலகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல திரைப்படத்துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர். டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் கங்கனாவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.