சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை
school
கனமழை, வெள்ளம் காரணமாக ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply