கடந்த சில நாட்களுக்கு முன்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா, வருமான வரி வழக்கில் தப்பிக்கும் நிலையில் இருக்கின்றார். ஜெயலலிதாவின் சமரச மனுவை வருமானவரித்துறை ஏற்றுக்கொண்டுள்ளதால் இந்த வழக்கு வாபஸ் ஆகிறது.
கடந்த 1992-1993 மற்றும் 1994-1995ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் வருமான வரி கட்டதாததற்கு அபராதத் தொகையும் சேர்த்து கட்டி விடுவதாக, ஜெயலலிதா தரப்பில் சமரச மனு ஒன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஜெயலலிதா சார்பில் அபராதத் தொகையும் செலுத்தப்பட்டது.
ஜெயலலிதாவின் சமரச மனுவை ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது.