அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் திடீர் ரெய்டு. பெரும் பரபரப்பு
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில் இன்று காலை திடீரென தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆளுங்கட்சி அமைச்சர் வீட்டிலேயே திடீர் ரெய்டு நடந்து வருவதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக ஆட்சியில் இருக்கும் அமைச்சர்களின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது என்பது அரிதான விஷயம். ஆனால் முறையாக வரி செலுத்தவில்லை என கூறியும், தேர்தல் பணப்பட்டுவாடா புகார் பற்றி விசாரணை செய்யும் விதமாக விஜய பாஸ்கர் வீட்டில் சோதனை நடைப்பெறுவதாக தெரிகிறது
புதுக்கோட்டை மற்றும் சென்னை உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள கல்லூரி,கல் குவாரி உள்ளிட்ட இடங்களில் சோதனை