அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை

அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் ஒருபக்கம் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இன்று காலை முதல் விஐபிக்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, நேற்று டிடிவி தினகரனுக்கு ஆதரவு என்று கூறிய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் வீடு மற்றும் சேப்பாக்கம் எம்.எல்.ஏக்கள் விடுதி ஆகியவற்றில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறது

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் பணம் கோடிக்கணக்காக புழங்குவதாக வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாகவும், சோதனையின் முடிவிற்கு பின்னரே கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் டாக்குமெண்டுக்கள் குறித்து தெரியவரும் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply