தமிழக தலைமைச்செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில் திடீர் ரெய்டு

தமிழக தலைமைச்செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில் திடீர் ரெய்டு

முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததில்  131 கோடி ரூபாய் ரொக்கமும், 177 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது.

இதில் ரூ.34 கோடி புதிய ரூ.2000 நோட்டுக்கள் என்பதால் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வங்கி அதிகாரிகள் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் ஆகியோர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் இன்று காலை திடீரென சென்னை அண்ணா நகரில் உள்ள ராம மோகன் ராவ் வீட்டில் சோதனை வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா குடும்பம் ஆகியோர்களுக்கு நெருக்கமான ராம மோகன் ராவ் வீட்டில் பல திடுக்கிடும் ஆதாரங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply