வருமான வரித்துறையினர் ரெய்டு: செய்யாத்துரை மகனின் வங்கிக்கணக்கு முடக்கமா?
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களின் மீது ரெய்டு செய்து வருகின்றனர். அந்த வகையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரான செய்யாத்துரை என்பவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் கோடிக்கணக்கில் பணமும் கிலோ கணக்கில் தங்கமும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செய்யாத்துரை அவர்களின் 3ஆவது மகன் ஈஸ்வரனின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை அதிரடியாக முடக்கி வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் சென்னை, அருப்புக்கோட்டையில் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் முறையான வருமான வரித்துறை சோதனைகளுக்கும், விசாரணைக்கும் வழிவிடும் வகையிலும், ஏற்கனவே தி.மு.க. லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுத்திருக்கும் ஊழல் புகார்களை சுதந்திரமாக விசாரிப்பதற்கு ஏற்ற முறையிலும், முதல்-அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக எடப்பாடி பழனிசாமி விலகிவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.