கிறிஸ்துவ, முஸ்லீம் மதத்தினர்களின் மக்கள் தொகையால் இந்தியாவுக்கு ஆபத்து. சிவசேனா

sivasenaசமிபகாலமாக முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மதத்துக்கு எதிரான கருத்துக்களை கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் சிவசேனா கட்சி தலைவர்கள், இன்று மீண்டும் ஒரு சர்ச்சைக் கருத்தை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஆண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சாத்வி தேவா தாகூர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தை அடுத்து சிவசேனா கட்சி நாளேடு இன்று வெளியிட்டுள்ள தலையங்கத்தில் இந்தியாவில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தினரின், மக்கள் தொகை உயர்வு இந்து மக்களுக்கு பெரிதும் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளதூ.

மேலும் அந்த தலையங்கத்தில் ‘மிக  விரைவில், இந்தியாவின் இஸ்லாமிய மக்கள் தொகையானது இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானைவிட அதிகரிக்கும் என்றும் இதன்விளைவாக இந்துக்களின் நாட்டில் ஒரு கலாச்சார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து இதுபோன்று இஸ்லாமிய மக்கள் தொகையானது வளர்ந்து கொண்டே சென்றால், இது மற்றொரு பாகிஸ்தானை உருவாக்க வழிவகை செய்யலாம் என்றும் எனவே இந்திய  நாட்டை காப்பாற்ற இந்த இரு மதத்தினர்களூம் குடும்ப கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும்என்றும் சிவசேனா கேட்டுக் கொண்டுள்ளது.

சிவசேனாவின் இந்த கருத்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மதத்தினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply