பஸ், கார் போல சாப்பாட்டிற்கு ஓட்டல் முன் நிறுத்திய ஹெலிகாப்டர் விமானி

பஸ், கார் போல சாப்பாட்டிற்கு ஓட்டல் முன் நிறுத்திய ஹெலிகாப்டர் விமானி

நாம் பேருந்துகளில் செல்லும்போது சாப்பாட்டிற்காக ஏதாவது ஒரு ஓட்டல் அருகே பேருந்தை ஓட்டுனர் நிறுத்துவார் என்பதை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் ஹெலிகாப்டர் விமானி ஒருவர் சாப்பிடுவதற்காக ஒரு ரெஸ்டாரெண்ட் முன்பு ஹெலிகாப்டரை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப்பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவகம் முன்பு நேற்று திடீரென ஹெலிகாப்டர் வந்து இறங்கியது.

பின்னர் அதில் இருந்து இறங்கிய விமானி நெய்யினால் தயாரிக்கப்பட்ட பர்கர் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கினார். கடை ஊழியர்களுக்கு ‘குட்பை’ சொல்லிவிட்டு ஹெலிகாப்டரில் ஏறி பறந்து விட்டார்.

முன்னதாக அவரிடம் உங்கள் பெயர் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு ‘ டான்’ என் ஸ்டைலாக கூறிய அவர் கையசைத்தபடி புறப்பட்டு சென்றார்.

அதற்கு முன்பு மெக்டொனால்ட் நிறுவனம் முன்பு தான் நிறுத்தியிருந்த ஹெலிகாப்டருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். வீடியோவும் எடுக்கப்பட்டு சமூகவலை தளங்களில் அது வெளியிடப்பட்டது.

Leave a Reply