உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டி நேற்று பெங்களூரில் ஓமன் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது.
2018ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று ஆட்டங்களின் முக்கிய ஆட்டமான இந்தியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. ஓமன் அணி உலக தர வரிசையில் இந்தியாவை விட 40 இடங்கள் முன்னிலையில் உள்ள நிலையில் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் நேபாளத்தை வென்று இருந்ததால் நம்பிக்கையுடன் இந்திய அணி மோதியது. இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடியதால் முதல்பாதி ஆட்டம் முடியும்போது 1-1 என்று சமநிலையில் இருந்தது.
ஆயினும் ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் பெனால்ட்டி கார்னர் வாய்ப்பில் ஓமன் மற்றொரு கோலை அடித்து முன்னிலை பெற்றது. அதன் பிறகு இந்திய அணியின் கோல் அடிக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தது. இறுதியில் 2-1 கணக்கில் ஓமன் வெற்றி பெற்றது.