ரோஹித் சர்மாவின் அபார ஆட்டம். 2வது இன்னிங்சில் இந்தியா 218/8

ரோஹித் சர்மாவின் அபார ஆட்டம். 2வது இன்னிங்சில் இந்தியா 218/8

1நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் கொல்கத்தாவின் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3வது நாளான நேற்று இந்திய அணி 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்களை இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 82 ரன்களும், விராத் கோஹ்லி 45 ரன்களும் எடுத்துள்ளனர்.

ஏற்கனவே இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 316 ரன்கள் எடுத்துள்ளதால் நியூசிலாந்து அணியைவிட 339 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது. இன்னும் இரண்டு விக்கெட்டுக்கள் இந்திய அணியிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 204 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply