ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி விளாசல். ஆஸ்திரேலியாவுக்கு 310 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பங்குபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தவான் 6 ரன்களில் தனது விக்கெட்டை பறி கொடுத்தாலும் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவும், விராத் கோஹ்லியும் இணைந்து அபாரமாக விளையாடினர். ரோஹித் சர்மா 171 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். விராத்கோஹ்லி 91 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 309 ரன்கள் குவித்துள்ளது.
310 ரன்கள் எடுத்தால் என்ற இமாலய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் ஸ்மித் மற்றும் பெய்லே ஆகியோர்களின் அதிரடி ஆட்டத்தால் 49.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மித் 149 ரன்களும், பெய்லே 112 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. ஆஸ்திரேலியாவின் ஸ்மித் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 15ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் நடைபெறவுள்ளது.