ஐநா நடத்தும் அணு அணு ஆயுத தடை தீர்மானத்தை இந்தியா புறக்கணிப்பு
உலகம் முழுவதும் அணு ஆயுதங்கள் அதிகரித்து வரும் நிலையில் இடஹ்னை தடுக்கும் வகையில் அணு ஆயுத பரவல் தடை வரைவு தீர்மானம் ஒன்று ஐ.நா.வில் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது.
உலகின் அமைதி நிலவ அனைத்து நாடுகளும் இதனை ஏற்க வேண்டுமென்று கோரிக்கை அனைத்து நாடுகளுக்கும் விடுக்கப்பட்டது. ஆனால் இந்தியா, கொரியா, இஸ்ரேல், பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய சில நாடுகள் இந்த தீர்மானத்துக்கு எதிராகவும், 164 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் வாக்களித்தன.
இந்நிலையில் இந்த தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக சமீபஹ்தில் பேச்சுவார்த்தை நடத்தி புதிய வரைவை கொண்டு வர ஐ.நா. பொதுசபை தீர்மான கொண்டு வந்துள்ளது. அணு ஆயுத தடை மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான ஐ.நா. பொதுசபையின் முதல் கமிட்டி நேற்று இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
ஆனால் இந்த தீர்மானத்தையும் இந்தியா புறக்கணித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா.விற்கான இந்தியாவின் நிரந்தர தூதர் வெங்கடேஷ் வர்மா கூறும்போது, ‘இந்த தீர்மானம் நம்பிக்கையானதாக இல்லை என்றார்.