பிரான்ஸை அடுத்து இந்தியாவிலும் தாக்குதல். உளவுத்துறை எச்சரிக்கை குறித்து உள்துறை அமைச்சர்

பிரான்ஸை அடுத்து இந்தியாவிலும் தாக்குதல். உளவுத்துறை எச்சரிக்கை குறித்து உள்துறை அமைச்சர்
rajnath
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் செய்ததை அடுத்து, அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருந்ததாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தியாவிலும் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை சமீபத்தில் எச்சரித்தது.

இந்த எச்சரிக்கையை அடுத்து இந்திய எல்லையிலும், இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கும் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகுக்கே ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளது. எனவே ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்க விவகாரத்தில் இந்தியாவும்  எச்சரிக்கையாக உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ்  தீவிரவாத அமைப்பால் எழுந்துள்ள அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு இந்தியா எச்சரிக்கையுடன் உள்ளது. இவ்வாறு உள்துறை அமைச்சர் கூறினார்.

English Summary: India alert to ISIS threat, says Rajnath Singh, a day after Home ministry warns of terror attacks

Leave a Reply