உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி: இந்தியா, இங்கிலாந்து அணிகள் வெற்றி

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி: இந்தியா, இங்கிலாந்து அணிகள் வெற்றி

ICC World Twenty20 India 2016: India v Bangladeshஉலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் நேற்றைய இரண்டு ஆட்டங்களில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் வெற்றி பெற்றன. நேற்றைய முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியுடன் மோதியது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பீல்டிங் செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 146 ரன்கள் எடுத்தது.

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில்  145 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Leave a Reply