ஜப்பான் பயணத்தில் சீனா மீது பகிரங்க குற்றம் சாட்டி இந்திய பிரதமர். பெரும் பரபரப்பு.

modi in japanஐந்து நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி, டோக்கியோவில் நடந்த இந்தியா மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பேசியபோது சீனாவை தாக்கி பேசியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே பல வருடங்களாக எல்லை பிரச்சினைகள் உள்பட பல பிரச்சனைகள் இருந்து வருகின்றன என்றும் இரு நாடுகளுக்கும் இடையே 4 ஆயிரம் கிலோ மீட்டர் உள்ள எல்லைப்பகுதியில் அடிக்கடி தகராறு இருந்து வரும் நிலையில், காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியிலும் அவ்வப்போது சீன ராணுவம் ஊடுருவி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று தெரிந்தும் அந்த மாநிலத்திற்கு உரிமை கொண்டாடி இந்தியாவுக்கு சீனா அடிக்கடி நெருக்கடியை கொடுத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய- சீன எல்லை பிரச்சனை போல சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஒரு குறிப்பிட்ட தீவு குறித்து தகராறு இருந்து வருவதாகவும் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு இருப்பதாக கருதப்படும் தென் சீன கடற்பகுதியின் சில குறிப்பிட்ட பகுதிகளை சீனா தனக்கு தான் சொந்தம் என்று கூறுகிறது என்றும் மோடி கூறினார்.. புருனே, மலேசியா, வியட்னாம், பிலிப்பைன்ஸ், தைவான் நாடுகளும் அந்த பகுதிக்கு உரிமை கொண்டாடுகின்றன. எனவே சீனா இந்தியாவுடன் மட்டுமின்றி மற்ற சில நாடுகளுடனும் ஆக்கிரமிப்பு மற்றும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது என்று பேசினார்.

மோடியின் இந்த பேச்சு சீனாவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று சீன பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

Leave a Reply