ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லையில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தரப்பில் இருந்து விடியவிடிய தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய ராணுவ வீரர்களின் அதிரடி தாக்குதலால் நிலைகுலைந்து போன பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டி தாக்குதலை நிறுத்தும்படி கெஞ்சியது. இதனால் இன்று காலை 6 மணிக்கு இந்திய ராணுவர்கள் தங்கள் தாக்குதலை நிறுத்தினர்.
நேற்று இரவு சம்பா மாவட்டத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு வீரர்கள் ரோந்து சுற்றும்போது திடீரென பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஸ்ரீராம் கவுரியா என்பவர் உயிரிழந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார். இதனால் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் முடிவு செய்தது. மிகவும் ஆக்ரோஷமாக இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் அடுத்தடுத்து நான்கு வீரர்கள் பலியானதால் வேறு வழியின்றி வெள்ளைக் கொடி காட்டி, தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தான் கோரியது.
இந்திய அணி தாக்குதலை நிறுத்தியதும் இறந்த பாகிஸ்தான் வீரர்களின் உடலை எடுத்துச் செல்ல பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். விடிய விடிய நடந்த இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டம் அதிகரித்துள்ளது.