தமிழக மீனவர்கள் பிரச்சனை. இந்திய-இலங்கை பேச்சுவார்த்தை தோல்வியா?

1

தமிழக மீனவர்கள் பிரச்சனை. இந்திய-இலங்கை பேச்சுவார்த்தை தோல்வியா?

தமிழக மீனவர்கள் இரட்டைமடி, சுருக்குவலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாக இலங்கை அரசு குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இதுகுறித்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் டெல்லியில் இரு நாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியா தரப்பில் இருந்து ‘மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆழ்கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் இரட்டை மடி, சுருக்கு வலை, இழுவை வலை பயன்படுத்துவதை நிறுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் என்றும் இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் 80 நாட்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தியது.

ஆனால் இந்த மூன்று கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீரா மறுத்துவிட்டார். இதன்காரணமாக இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக கருதப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.பி. சுமந்திரன் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இரட்டைமடி, சுருக்குவலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதை நிறுத்திவிட்டால் மற்ற பிரச்சினைகளுக்கு மிக எளிதாக தீர்வு காண முடியும்” என்று கூறினார்.

Leave a Reply