அணுசக்தி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை. ஒபாமா-மோடி முக்கிய ஆலோசனை.

obama and modiஇந்தியா அமெரிக்கா நாடுகளுக்கு இடையே இருந்த அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் இருந்த சுணக்க நிலை மாறி தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி நேற்று மதிய விருந்து அளித்தார். விருந்துக்கு பின்னர்  இரு தலைவர்களும்  நடத்திய பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமாக கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது.

ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தோட்டத்தில் தேநீர் அருந்திக் கொண்டு பேசியபோது, உடன்பாடு விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு, தீவிரவாதம், இருதரப்பு வர்த்தகம், பருவநிலை மாறுபாடு, ஆப்கானிஸ்தான் அரசியல் நிலவரம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் விவகாரம் உட்பட பல்வேறு விவகாரம் தொடர்பாக குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் இந்தியா- அமெரிக்கா இடையே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணும் வகையில், இந்தப் பேச்சுவார்த்தை அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்விவகாரத்தில் அமெரிக்காவுடன் இணைந்து முக்கியத்துவத்துடன் செயல்படுவதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply