2 இந்திய வீரர்கள் மரணத்திற்கு பழிக்கு பழி வாங்கிய இந்தியா
சமீபத்தில் இந்திய எல்லைக்குள் நுழைந்து இரண்டு இந்திய வீரர்களை கொலை செய்ததோடு அவர்களுடைய உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி பாகிஸ்தான் ராணுவத்தினர் சிதைத்தனர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை இந்தியா கடுமையாக கண்டித்தது. பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து கண்டனம் செய்தது.
இந்த நிலையில் ஒவ்வொரு இந்திய வீரரின் மரணத்திற்கு குறைந்தது நூறு பாகிஸ்தான் தலையாவது வேண்டும் என்று மரணம் அடைந்த இரண்டு இந்திய வீரரின் உறவினர்கள் ஆவேசமாக கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்திய வீரரின் மரணத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவத்தின் எரிபொருள் கிடங்கின் மீது இந்திய ராணுவம் தாக்குல் நடத்தியுள்ளதாகவும், இதனால் அந்த பகுதி முழுவதும் ஒரே பரபரப்பில் உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து டைம்ஸ் நெள ஊடகத்தின் செய்தி வீடியோவை இங்கே பாருங்கள்