உலகக்கோப்பை டி-20 அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி. கோஹ்லியின் அதிரடி வீண்.

உலகக்கோப்பை டி-20 அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி. கோஹ்லியின் அதிரடி வீண்.

cricket1உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியின் முக்கிய போட்டியான அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் மீண்டும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஷம்மி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் நல்ல ஃபார்மில் இருக்கும் விராத் கோஹ்லி அதிரடியாக விளையாடி 11 பவுண்ட்ரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 89 ரன்கள் குவித்தார்.

193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய விக்கெட்டான கெய்லேவின் விக்கெட் 2வது ஓவரிலேயே வீழ்ந்தது. அதனையடுத்து சாமுவேல் விக்கெட்டும் வீழ்ந்ததால் இந்தியாவின் வெற்றி உறுதி என கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்து கொண்டிருந்த நேரத்தில் சிம்மன்ஸ் மற்றும் சார்லஸ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை மளமளவென உயர்த்தியது. இறுதியில் 19.4 ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 196 ரன்கள் எடுத்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மிக அபாரமாக விளையாடிய சிம்மன்ஸ் 82 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Leave a Reply