பார்வையற்றோர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா

பார்வையற்றோர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா

துபாய் நாட்டில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் நேற்று பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 308 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பாதர் முனிர் 57 ரன்னும், ரியாசத் கான் 48 ரன்னும், கேப்டன் நிசார் அலி 47 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்து 8 பந்துகள் மீதமுள்ள நிலையில் அபார வெற்றி பெற்றது. இந்திய வீரர் சுனில் ரமேஷ் 93 ரன்களும், அஜய் ரெட்டி 62 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள்.

2014-ம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்தியா தற்போதும் உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது. இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Leave a Reply