ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் சீன துணை அதிபர் சந்திப்பு.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் சீன துணை அதிபர் சந்திப்பு.
china
சீன துணை அதிபர் லீயுவான்சாவ் அவர்கள் 5 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை லீ யுவான்சாவ் சந்தித்து பேசினார். இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியிருப்பதாவது:

இந்தியா வந்துள்ள முதல் சீன துணை அதிபர் லீ யுவான்சாவ் தான். அவருடனான சந்திப்பு சிறப்பானதாக அமைந்தது. இந்தியாவும், சீனாவும் சமீபகாலமாக மிகச் சிறந்த நட்பு நாடுகளாகத் திகழ்கின்றன. அரசியல்ரீதியாகவும் இருநாடுகள் இடையே இப்போது சிறப்பான புரிந்துணர்வு உள்ளது. இந்தியா, சீனா இடையிலான ஒத்துழைப்பு என்பது ஆசியப் பிராந்தியரீதியிலும், சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியா, சீனா இடையிலான வர்த்தகம் இப்போதும் ரூ.7,950 கோடியாக உள்ளது. இதனால் இரு நாடுகள் மட்டுமின்றி அண்டை நாடுகளும் பயனடைகின்றன. “மேக் இன் இந்தியா’ திட்டத்தில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு விடுக்கிறது. இரு நாடுகள் இடையே அனைத்து துறைகளிலும் சிறப்பான புரிதலும் ஒத்துழைப்பும் இருக்க வேண்டுமென இந்தியா விரும்புகிறது என்று பிரணாப் கூறியுள்ளார்.

Leave a Reply