மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் வெற்றி.

gslvமனிதனை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் வகையில் அமைக்கப்பட்ட புதிய மற்றும் அடுத்த தலைமுறைக்கான ஜி.எஸ்.எல்.வி. மார்க்3  என்னும் நவீன ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) வடிவமைத்து அதை இன்று வெற்றிகரமான விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட்டின் மேல்பகுதியில், மூன்று மனிதர்கள் பத்திரமாக விண்ணுக்கு சென்று ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பின்னர் மீண்டும், பூமிக்கு பத்திரமாக வரும் வகையில் ‘கப் கேக்’ வடிவிலான ஒரு நவீன அறை போன்ற அமைப்பு இந்த விண்கலத்தில் உள்ளது..

இந்த ராக்கெட் விண்ணில் 125 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றுவிட்டு பின்னர் அடுத்த 20வது நிமிடத்தில் வங்காளவிரிகுடா கடலில் பத்திரமாக பாராசூட் மூலம் விழுந்துவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் கடற்படையின் உதவியுடன் கடலில் இருந்து விண்கலத்தை மீட்டு மீண்டும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திடம் ஒப்படைக்கப்படும்.

மனிதர்களை விண்கலத்தில் அனுப்புவதன் நோக்கம் காரணமாகவே இந்த ராக்கெட் அனுப்பப்படுகிறது. இருப்பினும்  மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான முறையான அனுமதி இன்னும் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கவில்லை. இந்தியாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டில் அதிகபட்ச எடைகொண்ட ராக்கெட் என்ற பெருமையை ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் பெறுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு இதை விண்ணில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் செலுத்தினர்.

Leave a Reply