பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி: ரசிகர்கள் மகிழ்ச்சி

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி: ரசிகர்கள் மகிழ்ச்சி

ஒரு பக்கம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் அதே இங்கிலாந்தில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை, இந்தியா தோற்கடித்தது.

இந்த போட்டியில் இந்திய அணி 21 மற்றும் 24வது நிமிடத்தில் தல்விந்தர், 33வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத், 47வது நிமிடத்தில் ஆகாஷ்தீப், 49வது பர்தீப், 57வது நிமிடத்தில் பாகிஸ்தானின் முஹமது உமர் முதல் கோல் அடித்தார். இறுதியில் 59வது நிமிடத்தில் ஆகியோர் கோல் அடித்தனர்.

இறுதியின் இந்திய அணி 7-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி தனது 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 20ஆம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நெதர்லாந்து அணியுடன் மோத உள்ளது. கிரிக்கெட்டில் தோல்வி அடைந்தாலும் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளதால் விளையாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply