ஒரே இன்னிங்ஸில் 6 டக் அவுட். 62 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் செய்த சாதனை.

duck out1952ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணி சாதனை ஒன்றை நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளது. ஆனால் அந்த சாதனையை இந்திய மக்கள் கொண்டாட முடியாத சோகத்தில் இருப்பதுதான் உண்மை.

கடந்த 1952ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி ஒரே இன்னிங்ஸில் ஆறு பேட்ஸ்மேன்கள் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். அந்த சாதனையை நேற்றைய 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சமன் செய்தனர். இந்திய அணி தரப்பில் முரளி விஜய், புஜாரே, விராத் கோஹ்லி, ஜடேஜா, புவனேஷ்குமார்,பங்கஜ் சிங் ஆகிய ஆறு பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் தோனி 71 ரன்களும், ரஹானே 24 ரன்களும், அஸ்வின் 40 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.

Leave a Reply