இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் பந்துவீச தவறிய தோனிக்கு, சம்பளத்தின் 60% பணத்தை அபராதமாக செலுத்த ஐ.சி.சி. நடுவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மற்ற வீரர்களின் சம்பளத்தில் 30% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் மிகவும் மெதுவாக பந்து வீசியதாகவும், வேண்டுமென்றே இந்திய அணியினர் பந்துவீச காலதாமதப்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டது. இதனை ஐ.சி.சி நடுவர் ரஞ்சன் மதுகாலே விசாரணை செய்த நேற்று தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பில் இந்திய அணியினர் மூன்று ஓவர்கள் தாமதமாக பந்து வீசியுள்ளது தெரிய வந்துள்ளதாகவும், ஒரு ஓவருக்கு 10% வீதம் 3 ஓவர்களுக்கு 30% இந்திய வீரர்களின் சம்பளத்தில் அபராதம் விதிக்கப்படுவதாகவும், கேப்டன் தோனிக்கு இரு மடங்காக 60% அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டு, அபராதத்தை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.