கடந்த சில நாட்களாக டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வந்தது என்பதும் இதில் இந்தியா பதக்கங்களை குவித்தது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கப்பதக்கம் வென்றார்.
இதனையடுத்து பாரா ஒலிம்பிக் போட்டியில் 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என இந்தியா மொத்தம் 19 பதக்கங்களை வென்று 24வது இடத்தில் உள்ளது
பாரா ஒலிம்பிக் போட்டியில் 96 தங்கம் 60 வெள்ளி 51 வெண்கலம் என 207 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது