காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம்


ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதனையடுத்து இந்தியாவுக்கு மொத்தம்ன் 7 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆடவர் பளுதூக்குதல் 105 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பிரதீப் சிங்கிற்கு வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா 7 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்களம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றுள்ளது, இருப்பினும் இன்றைய மெடல் பட்டியலில் இந்தியா 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 84 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 48 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும், 32 பதக்கங்களுடன் கனடா 3வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply