இந்தியா-கொரியா கூட்டுத்தயாரிப்பில் பிறந்த குழந்தை. ஐ.நா பொதுச்செயலாளர் பெருமிதம்

இந்தியா-கொரியா கூட்டுத்தயாரிப்பில் பிறந்த குழந்தை. ஐ.நா பொதுச்செயலாளர் பெருமிதம்

BanKiMoonஉலகின் மிகப்பெரிய பதவியாக கருதப்படும் ஐ.நா பொதுச்செயலாளராக பணியில் இருக்கும் பான் கீ மூன் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஒன்றான  ‘லிங்க்ட்இன்’ (LinkedIn) பக்கத்தில் தனது மலரும் நினைவுகள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் தான் இதுவரை பணிபுரிந்த பதவிகளிலேயே இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள கொரியா தூதரகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றியதையே பெருமையுடன் கருதுவதாகவும், தன்னுடைய அந்த சிறிய அறையில் தனக்கு மிகப்பெரிய அனுபவங்கள் கிடைத்ததாகவும் கூறினார்.

மேலும் தான் இந்தியாவில் பணிபுரிந்தபோதுதான் இரண்டாவது குழந்தை பிறந்ததாகவும், தனது மகள் ஒரு இந்திய வாலிபரை திருமணம் செய்ததும் தன்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது மகளுக்கும் இந்திய மருமகனுக்கும் பிறந்த பேரக்குழந்தையை இந்திய-கொரிய கூட்டுத்தயாரிப்பாகவே தான் கருதுவதாகவும் நகைச்சுவையுடன் பதிவு செய்துள்ளார்.

கடந்த 1944ஆம் ஆண்டு கொரியாவில் பிறந்த பான்கீ மூன் சியோல் பல்கலையில் இளநிலை பட்டமும், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் முதுநிலை பட்டமும் பெற்றவர். இவர் கடந்த 2007ஆம் ஆண்டுமுதல் ஐ.நா பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Today News: India has very special place in my heart: Ban Ki-moon, UN Secretary General

Leave a Reply