இறுதிப்போரின்போது நாங்கள் கேட்காமலே இந்தியா உதவி செய்தது. ராஜபக்சே

இறுதிப்போரின்போது நாங்கள் கேட்காமலே இந்தியா உதவி செய்தது. ராஜபக்சே

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் இடையே இறுதிப்போர் நடைபெற்றபோது இந்திய ராணுவம் சிங்கள ராணுவத்திற்கு உதவியதாகவும், ஆயுதங்கள் அளித்ததாகவும், சிங்கள ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துவந்த நிலையில் தற்போது முன்னாள் இலங்கை அதிபர் அளித்த பேட்டி ஒன்றில், ‘’இலங்கையில் உள்நாட்டு போர் நடந்துவந்த சமயம் உதவி கேட்காமலேயே இந்தியா உதவ முன்வந்தது’ என கூறியுள்ளார். இதன்மூலம் இந்தியா, சிங்கள ராணுவத்திற்கு உதவி செய்தது உறுதியாகியுள்ளது.

நேற்று தனியார் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சே ‘இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது கேட்காமலே இந்தியா தானாக உதவ முன்வந்தது. மனிதாபிமானத்துடன் எடுக்கப்பட்ட போர் நிறுத்த முடிவுக்கும் இந்தியா உதவியது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகளும் இலங்கைக்கு உதவியது’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply