இந்திய ஹாக்கி அணி கேப்டன் மீது கற்பழிப்பு புகார். போலீஸார் விசாரணை
இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார்சிங் மீது அவரது நீண்ட நாள் காதலி ஒருவர் செக்ஸ் புகார் ஒன்றை கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
29 வயதான சர்தார்சிங் என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். 21 வயதில் கேப்டன் பொறுப்பை ஏற்ற பெருமைக்குரியவர் என்ற அந்தஸ்தை பெற்ற இவருக்கு கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதும் மத்திய அரசால் வழங்கப்பட்டது. இந்நிலையில் சர்தார்சிங் மீது அவரது நீண்ட நாள் காதலி பரபரப்பான செக்ஸ் புகார் ஒன்றை கூறியுள்ளார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி தன்னை பலமுறை கற்பழித்ததாக அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்
இதுகுறித்து சர்தார்சிங் காதலி தன்னுடைய புகாரில் கூறி இருப்பதாவது:–
இந்திய வம்சாவழியை சேர்ந்த நான் இங்கிலாந்தில் வசிக்கிறேன். ஹாக்கி வீராங்கனை என்ற முறையில் கடந்த 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது சர்தார்சிங்குடன் அறிமுகம் ஆனேன். எங்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. திருமணம் செய்வதாக கூறி என்னிடம் வாக்குறுதி அளித்தார். அவரால் நான் கர்ப்பம் ஆனேன். பின்னர் அதை கலைக்க சொன்னார். என்னுடன் திருமண நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார். ஆனால் இப்போது திருமணம் செய்ய மறுக்கிறார். என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சர்தார்சிங் தொந்தரவு செய்கிறார். மேலும் என்னை மிரட்டுகிறார்.
இவ்வாறு அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.