முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. ராஜ்நாத் சிங்
72 பிரிவுகளைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தினர் பாதுகாப்பாக இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே என்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் பெரும் பரபரப்புக்கு இடையே நேற்று தொடங்கியது. மத சகிப்புத்தன்மையின்மை குறித்த பிரச்சனையை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகியிருந்த நிலையில் பாராளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ”அம்பேத்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட நமது அரசமைப்புச் சட்டத்தில் ‘மதச்சார்பின்மை’, ‘சோஷலிசம்’ என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. அரசமைப்புச் சட்டத்தில் அந்த வார்த்தைகளைச் சேர்ப்பது அவசியம் என அம்பேத்கர் கருதவில்லை.
அதன்பின் 1976-ம் ஆண்டில்தான், 42-வது சட்டத் திருத்தம் மூலமாக, ‘மதச்சார்பின்மை’, ‘சோஷலிசம்’ என்ற வார்த்தைகள் அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. மதச்சார்பற்ற தன்மை என்பது, இந்தியாவின் இயல்பிலேயே அமைந்துள்ளது. ஆனால், ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை தற்போது திரித்துப் பொருள்கொள்ளப்பட்டு, மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் முடிவுக்கு வர வேண்டும்.
அவமதிப்பு, புறக்கணிப்பு ஆகியவற்றால் பாதிப்புகளுக்கு ஆளான அம்பேத்கர், இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று ஒருமுறை கூட யோசித்ததில்லை. மதச்சார்பின்மை என்ற வார்த்தை தவறாகப் பயன்படுத்தப்படுவதால், சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால், சமூக ஒற்றுமையைப் பராமரிப்பது சிரமமாக உள்ளது. 72 பிரிவுகளைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தினர் பாதுகாப்பாக இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே” என்று கூறினார்.
English Summary: India is the only one country to live Muslims safely