இம்ரான்கானை விவாகரத்து செய்ய இந்தியா காரணமா? ரேஹம் கூறும் திடுக்கிடும் தகவல்
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் தெக்ரிக் இன்சாப் கட்சி தலைவருமான இம்ராம்கானின் மனைவி ரேஹம், திருமணமான பத்தே மாதத்தில் தனது கணவரை விவாகரத்து செய்தது ஏன்? என தற்போது ஊடகங்களுக்கு விளக்கியுள்ளார்.
பெண்களுக்கான அதிகாரம்’ என்ற தலைப்பில் இந்தியாவில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேச எனக்கு அழைப்பு வந்தது. அதை ஏற்றுக்கொண்டு புறப்பட தயாரானேன். அதற்கு இம்ரான் கான், அவரது பாகிஸ்தான் தெக்ரிக்– இன்சாப் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனால் கடைசி நேரத்தில் எனது பயணத்தை ரத்து செய்தேன். திருமணத்துக்கு பிறகு பெண்கள் முழுவதுமாக தங்களை மறந்து விடுகின்றனர். அவர்களது அடையாளங்களையும் தொலைக்கின்றனர். கணவரின் விருப்பப்படி நடக்கின்றனர்.
அது போன்று தான் நானும் எனது கணவருடன் ஆன உறவுக்காக விட்டுக் கொடுத்தேன். அதற்காக தற்போது வருந்துகிறேன். அது போன்று அவர் பல விதங்களில் எனது வளர்ச்சியை தடுத்து வந்தார்.
இதனால் எங்களது உறவு பலவீனம் அடைந்து உடைந்தது. இது போன்ற தருணங்களில் எனது உரிமைகளை பாதுகாக்க யாரும் முன்வரவில்லை. எனவே எங்களுக்குள் விவாகரத்து ஏற்பட்டது’’ என்று கூறியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இம்ரான்கான் இந்தியாவுக்கு வருகை தந்து பிரதமர் மோடியை சந்தித்த நிலையீல், ரேஹம் இந்தியாவுக்கு செல்வதை இம்ரான்கான் தடுத்ததால்தான் விவாகரத்து நடைபெற்றதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary: India is the reason for Imrankhan-Reham divorce?