பெங்களூர் டெஸ்ட்: இந்தியா நிதான ஆட்டம். 276/4

பெங்களூர் டெஸ்ட்: இந்தியா நிதான ஆட்டம். 276/4

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களை இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது.

பெங்களூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 276 ரன்கள் குவித்தது.

இதனால் முதல் இன்னிங்சில் 87 ரன்கள் பின் தங்கியிருந்த இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் சுதாரித்து ஆடி நேற்றைய ஆட்டமுடிவில் 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 76 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

முதல் இன்னிங்ஸில் எட்டு விக்கெட்டுக்களை வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் லியோ, 2வது இன்னிங்ஸில் இன்னும் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply