விறுவிறுப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட். தென்னாப்பிரிக்கா 184/10
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியும் மளமளவென விக்கெட்டுக்களை இழந்து 184 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 17 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கி தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. சற்று முன்பு வரை இந்திய அணி 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்துள்ளது. தவான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
முன்னதாக முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 63 ரன்களும், ஆம்லா 43 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.