20 ஓவர் கிரிக்கெட். தோனியின் பிடிவாதத்தால் இந்திய அணி தோல்வி.

cricketஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்குக்கு இடையே நேற்று நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தோனியின் பிடிவாதத்தால் இந்திய அணி தோல்வி அடைந்தது. வெற்றிக்கு தேவையான வின்னிங் ரன்னை அவரே அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தோனி விளையாடியதால் இந்தியா தோல்வியடைந்ததாக வர்ணனையாளர்கள் கூறினர்.

நேற்று இங்கிலாந்து நாட்டின் பிரிம்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. மோர்கன் 71 ரன்களும், ஹேல்ஸ் 40 ரன்களும் எடுத்ததால் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கமே அதிர்ச்சி அளித்தது. ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே ரஹானே ஆட்டமிழந்தார். இருப்பினும் தவான் மற்றும் விராத் கோஹ்லியின் ஜோடி அதிரடியாக விளையாடியது. விராத் கோஹ்லி 66 ரன்களும், தவான் 33 ரன்களும் எடுத்தனர். 6 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்தால் வெற்றி எளிய இலக்கு இருந்த நிலையில் விராத் கோஹ்லி ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரெய்னாவும் அவுட் ஆனதால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

மேட்ச் வின்னர் என்றழைக்கப்படும் தோனி அணியை நிச்சயம் கரையேற்றுவார் என்ற நம்பிக்கை இருந்த நிலையில் தோனி ரன் எடுக்க திணறினார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தில் சிக்சர் அடித்த தோனி இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுக்கக்கூடிய நிலை இருந்தபோதும் அவர் ரன் எடுக்க ஓடவில்லை. இதே போல் 5வது பந்திலும் ஒரு ரன் எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தையும் தோனி வேண்டுமென்றே மிஸ் செய்தார். வின்னிங் ஷாட் அடிக்க வேண்டுமென்ற பிடிவாதத்தால் அவர் இருந்ததாக தெரிந்தது. கடைசி பந்தில் 6 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஒரு ரன் மட்டும் தோனி எடுத்ததால் இந்தியா இந்த போட்டியில் தோல்வி அடைந்தது.

Leave a Reply