ஹேமில்டனில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசீலாந்து அணி 42 ஓவர்களில் 271 ரன்கள் எடுக்க இந்தியாவுக்கு 42 ஓவர்களில் 297 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் மழை குறுக்கிட்டபோது 41.3 ஓவர்களில் இந்தியா 277 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 293 ரன்களாக இருந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்.
ஆகவே நியூசீலாந்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 15 ரன்களில் வெற்றி பெற்று தொடரில் 2- 0 என்று முன்னிலை வகிக்கிறது.
41வது ஓவர் முடிவில் இந்தியா 275/8 என்று இருந்தது. அதாவது 6 பந்துகளில் 22 ரன்கள் தேவை. ஆனால் கடைசி ஓவரில் 3 பந்துகள் வீசி முடிந்தவுடன் மீண்டும் மழை வரத் தொடங்கியது நடுவர் பைலை அகற்றினார். அப்போது 293 ரன்களை இந்தியா எட்டியிருந்தால் நல்ல வெற்றி பெற்றிருக்கும்.