6 ஆண்டுகளில் 15 பத்திரிகையாளர்கள் கொலை! எதனால் தெரியுமா?
கடந்த ஆறு ஆண்டுகளில், ஊழலை அம்பலபடுத்திய 15 பத்திரிகையாளர்கல் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு, ஊடக சுதந்திரம் மற்றும் ஊழல் குறித்து, 180 நாடுகளில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில் பொதுத்துறை நிறுவனங்களில் நிலவும் ஊழலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் அதிகளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியா, பிலிப்பைன்ஸ், மாலத்தீவு ஆகிய நாடுகளில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகமாக இருப்பதாகவும், கடந்த 6 ஆண்டுகளில், இந்த நாடுகளில் ஊழலை அம்பலபடுத்திய 15 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவைவிட அதிக மதிப்பெண் பெற்று சீனா 77-வது இட