ஐடிபிஐ வங்கியை தவிர மற்ற வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை. அருண்ஜெட்லி

ஐடிபிஐ வங்கியை தவிர மற்ற வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை. அருண்ஜெட்லி

arun jaitleyஇந்திராகாந்தி ஆட்சியில் தனியார் வங்கிகள் அனைத்தும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் வங்கிகளை தனியார் மயமாக்க பாஜக அரசு முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில் வங்கித் துறையை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் வங்கித்துறையை சீரமைக்க வேண்டியுள்ள நிலை உள்ளதாகவும், தற்போதைய சூழலை பொறுத்தவரை ஐடிபிஐ வங்கியைத் தவிர மற்ற வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு மத்திய அரசு தயாராக இல்லை என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

நேற்று `தி எகானமிஸ்ட் இந்தியா’ என்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அருண்ஜெட்லி மேலும் கூறியதாவது:

வரி சீர்திருத்தம், வங்கி அமைப்புகளை சீர்செய்வது, உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்றவற்றில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது ஆனால் வங்கிகளில் அரசின் பங்குகளை விலக்கி கொள்வதற்கு இன்னும் தயாராகவில்லை.

வங்கித் துறையை மறுசீரமைப்பு செய்வது முக்கியமானதாக இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்க அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் பெரும்பான்மை பங்குகளை அரசே வைத்திருக்கும். ஆனால் ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசின் பங்குகளை 49 சதவீதமாக குறைக்க நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். வங்கிகளை ஒருங்கிணைப்பது என்பது தற்போதைய நிலையிலேயே தொடரும். ஆனால் பல்வேறு வங்கிகள் செயல்படுவது மிக முக்கியமானது என்று இந்தியா கருதுகிறது என்று நான் நினைக்கிறேன். மேலும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை சீர்திருத்தம் செய்ய வேண்டும். மேலும் தனியார்மயமாக்குவது குறித்து பொதுமக்களிடம் கருத்தை உருவாக்க வேண்டும்.

சமூக அமைப்பில் பொதுத்துறை வங்கிகள் மிக முக்கியமான பங்களிப்பை செய்து வருகின்றன. வங்கித் துறையை தனியார்மயமாக்குவது பற்றி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை பொறுத்தவரை ஒரே மாதிரியான கருத்துகள் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

இந்த இலையுதிர் காலத்தில் மிக கடினமான திட்டத்தின் மூலம் அதே சமயத்தில் உறுதியோடு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை சட்டமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

ஜிஎஸ்டி மசோதா நிறைவேறிவிட்டால் போதும் மிகப் பெரிய மாற்றம் நிகழும். முதன் முறையாக இந்தியா முழுவதும் ஒரே சந்தையாக இருக்கும். இருந்த போதிலும் கூட்டாட்சி முறையில் மாநில அரசுகளின் வருவாய் இதனால் பாதிக்கப்படக்கூடாது. ஜிஎஸ்டி வரியை பகிர்வதில் சமநிலை இருக்க வேண்டும் என்பதே மத்திய, மாநில அரசுகளின் இலக்காக உள்ளது.

ஜிஎஸ்டி சட்டத்தை பொறுத்தவரை நாட்டின் வரி அமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால் அதிகமான வரியை வசூல் செய்ய வேண்டும் என்பது நோக்கமல்ல என்று ஜேட்லி தெரிவித்தார். ஆனால் ஜிஎஸ்டி எத்தனை சதவீதம் இருக்கும் என்பது குறித்து ஜேட்லி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் மத்திய அரசு அதிகாரிகள் ஜிஎஸ்டி 18 சதவீதம் வரை இருக்கலாம்

இவ்வாறு அருண்ஜெட்லி பேசினார்.

Leave a Reply