இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் மீண்டும் ஒரே நாடாக மாறும். பா.ஜ.க., பொதுச் செயலாளர் ராம் மாதவ்
சுதந்திரத்திற்கு முன்னர் பிரிந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் மீண்டும் ஒருநாள் ஒன்றுசேரும் என்று ஆர்.எஸ்.எஸ் நம்புவதாக பா.ஜ.க., பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் பயணங்களை முடித்துக் கொண்டு திடீரென பாகிஸ்தான் சென்றது இந்திய அரசியலில் மட்டுமின்றி உலக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கத்தார் நாட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பா.ஜ.க., பொதுச் செயலாளர் ராம் மாதவ் இந்தியாவுடன் எந்த நாடு சேர விரும்பினாலும் சேர்த்து கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ”இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மூன்றுநாடுகளும் ஒருநாள் மீண்டும் ஒன்றுசேரும் என்று ஆர்.எஸ்.எஸ் நம்புகிறது. மூன்று நாடுகளும் ஒன்று சேருவது போரால் அல்ல அதிகப்படியான நல்லெண்ணத்தால் என்று கூறினார்.
எந்த நாட்டின் மீது போர் செய்வது இதன் அர்த்தமல்ல. எந்த நாட்டினையும் ஒருங்கிணைத்து கொள்வோம். போரின் மூலமாக அல்லாமல், மக்களின் ஒப்புதலுடன் நடந்தால்.
கடந்த 60 ஆண்டுகளாக தான் இந்த மூன்று நாடுகளும் பிரிந்து உள்ளன. ஆனால் இவை வரலாற்று ரீதியான ஒருங்கிணைந்த பண்பாடும், கலாச்சாரமும் கொண்டவை.
நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர். நானும் இந்த கருத்தினை ஏற்றுக் கொள்கிறேன்.”
இவ்வாறு கூறினார்.
இருப்பினும் தனது இந்த கருத்திற்கு பிரதமர் மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் அவர் தனது டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
Chennai Today News: India, Pakistan and Bangladesh will reunite soon said Ram Madhav