இயற்கை பேரிடர் அபாய நாடுகள் பட்டியல். இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
எதிர்பாராமல் வரும் இயற்கை பேரிடர்களை சமாளித்து மக்களை காப்பாற்றும் நாடுகளில் சிறந்த நாடுகள் எவை என்பது குறித்த பட்டியல் சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 77வது இடமே கிடைத்துள்ளது என்பது வருந்தத்தக்க விஷயமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் இயற்கை பேரிடர்களை சமாளிப்பதில் மிக மோசமான நாடுகள் பட்டியலில் வங்கதேசம் 5வது இடத்திலும், பாகிஸ்தான் 72வது இடத்திலும் உள்ளது.
ஐநா சுற்றுச்சூழல் மற்றும் மானுட பாதுகாப்பு பல்கலைக்கழகம் உலக இடர்பாடு அறிக்கை 2016 என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இயற்கை பேரிடர் மற்றும் அதனை கையாளும் விதத்தில் ஏற்படும் சமூக ரீதியான பாதிப்புகள் என்ற அளவில் 171 நாடுகளை மதிப்பீடு செய்துள்ளது.
இயற்கை பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்பு உள்பட சேதங்களை தவிர்ப்பதற்கான உள்கட்டமைப்பு, மற்ற வசதிகள், நடைமுறைகள், வலுவான நிர்வாகத் திறமைகளின்மை ஆகியவையால் இயற்கை நிகழ்வை பேரிடராக மாற்றிவிடுகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.