உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம்:
இந்தியாவில் தான் அதிக ஏழைகள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் சீனா மற்றும் அமெரிக்கா உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஹரன் குளோபல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள 2017ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் சீனாவில் 819 பணக்காரர்கள் இருப்பதாகவும், அதில் 210 பேர் புதியவர்கள் என்றும், அமெரிக்காவில் 571 பணக்காரர்கள் இருப்பதாகவும், அதில் 19 பேர் புதியவர்கள் என்றும், இந்தியாவில் 131 பேர் பணக்காரர்கள் இருப்பதாகவும்,அதில் 31 பேர் புதியவர்கள் என்றும், அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 14 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதல் இடத்திலும் உலக அளவில் 19வது இடத்திலும் உள்ளார்.
இந்தியாவை அடுத்து பிரிட்டன், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, பிரான்ஸ், பிரேசில் மற்றும் கனடா நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
india reclaims third spot in hurun global rich list 2018 as china dominates